search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் துரைமுருகன்"

    • குறைந்தபட்சம் 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்.
    • தி.மு.க. தொண்டர்கள் ஒவ்வொருவரும் கடுமையாக உழைக்க வேண்டும்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார். தேர்தல் பணி குறித்து தி.மு.க. பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் ஆய்வு செய்தார்.

    எனது 60 ஆண்டு கால அரசியலில் இந்தியாவில் மிகச்சிறந்த முதல்வராக ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். கருணாநிதி முதல்வராக இருந்தபோது சுதந்திர தினத்தில் முதல்வர் கொடி ஏற்றுதல் என மாநிலத்திற்கான கூடுதல் அதிகாரங்களை பெற்றார். அப்போது இந்தியாவில் உள்ள அத்தனை மாநிலங்களும் கருணாநிதியை திரும்பி பார்த்தனர். அதேபோன்று நிலையை அவரது மகனான ஸ்டாலினும் பெற்றுள்ளார்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நாட்டிலேயே சிறந்த முதல்வராக திறம்பட பணியாற்றி வருகிறார். கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்த காலத்தில் டெல்லி சென்று பிரதமர்களை சந்தித்து எத்தனையோ திட்டங்களையும் உரிமைகளையும் பெற்று தந்தார்.

    ஆனால் இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இங்கிருந்தபடியே டெல்லியை ஆட்டி படைக்கிறார். தந்தையை மிஞ்சும் தனயனாக கருணாநிதியை மிஞ்சும் மகனாக மு.க.ஸ்டாலின் உள்ளார்.

    இந்த தேர்தல் மிகவும் முக்கியமான தேர்தல். குறைந்தபட்சம் 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். இதற்காக தி.மு.க. தொண்டர்கள் ஒவ்வொருவரும் கடுமையாக உழைக்க வேண்டும். வீடு, வீடாக சென்று வாக்காளர்களை நேரடியாக சந்திக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கருணாநிதிக்காக மெரினா கடற்கரையில் பேனா நினைவு சின்னம் அமைப்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த துரைமுருகன்,

    கருணாநிதி தனது எழுத்துக்களால் ஏழை மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் உயர்வுக்காக பாடுபட்டுள்ளார். அவரின் பேனாவுக்கு வலிமை ஜாஸ்தி.

    அண்ணாவே அவரது எழுத்துக்களை பார்த்து ஆச்சரியப்பட்டுள்ளார். அப்படிப்பட்ட பேனாவை பாக்கெட்டுக்குள் வைப்பது சரியல்ல. அதை நினைவு சின்னமாக கொண்டு வருவதில் தவறு ஏதும் இல்லை.

    தேர்தல் களத்தில் டாக்டர் பட்டம் பெற்ற தி.மு.க. முன்னணி தலைவர்கள் இந்த தேர்தலில் பணியாற்றுவதால் எதிரணியை பற்றி கவலை இல்லை. எதிர்க்கட்சியினர் அளிக்கும் புகார்கள் குறித்து தேர்தல் ஆணையம் பதில் சொல்லும். எதிர்க்கட்சிகள் என்ன சொன்னாலும் தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர் வெற்றி பெறுவார்.

    • அமைச்சர் துரைமுருகனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனையில் அனுமதி.
    • காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு சிகிச்சை.

    தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் துரைமுருகனின் உடல்நிலையை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர்.
    • அமைச்ர் துரைமுருகன் இன்று டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்புவார் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

    சென்னை:

    தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு அவருக்கு டாக்டர்கள் உடல்நிலையை பரிசோதனை செய்தனர். இதையடுத்து துரைமுருகன் இன்று டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்புவார் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

    • பொன்னை ஆற்றின் குறுக்கே ரூ.40 கோடியில் நடைபெற்று வரும் மேம்பால பணிகளையும் அமைச்சர் துரைமுருகன் பார்வையிட்டார்.
    • தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் காலாவதியானது. தற்போதாவது மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதலை அளிப்பார் என எதிர்ப்பார்க்கிறோம்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் பொன்னையில் தனியார் திருமண மண்டபத்தில் தி.மு.க. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு பேசினார்.

    அவர் பேசுகையில், தமிழகத்தில் நிதிநிலை கடும் நெருக்கடியில் உள்ளது. கொஞ்சம் கொஞ்சமாக நாங்கள் அதனை சமாளித்து வருகிறோம். நிதி நெருக்கடியிலிருந்து மீட்கும் பணிகள் படிப்படியாகத்தான் நடக்கும். அதுவரையில் கட்சியினர் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றார். பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களையும் அவர் பெற்றுக்கொண்டார்.

    முன்னதாக பொன்னை ஆற்றின் குறுக்கே ரூ.40 கோடியில் நடைபெற்று வரும் மேம்பால பணிகளையும் அமைச்சர் பார்வையிட்டார்.

    நிகழ்ச்சியில் கதிர் ஆனந்த் எம்.பி. உள்ளிட்டோர்பங்கேற்றனர்.

    கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் காலாவதியானது. தற்போதாவது மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதலை அளிப்பார் என எதிர்ப்பார்க்கிறோம். அவர் ஒப்புதல் அளிக்கவில்லை என்றால் அதன் பின்னர் எங்களுடைய நிலைப்பாடு என்ன என்பது தெரியும். தமிழக கவர்னர் முழுக்க முழுக்க அரசியல் செய்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தென்பெண்ணை ஆறு நீர் பகிர்வு குறித்து 4 வாரங்களில் ஆணையம் அமைக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    • தமிழகத்தில் தவறுகள் நடந்தால் நாங்கள் கேட்க அதிகாரம் உள்ளது என தமிழக கவர்னர் ரவி கூறி உள்ளார்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், காட்பாடி காந்தி நகரில் 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடந்தது. இதில் நீர் வளம் மற்றும் கனிமவளத் துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு பேசினார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தென்பெண்ணை ஆறு நீர் பகிர்வு குறித்து 4 வாரங்களில் ஆணையம் அமைக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. தமிழக நீர்வளத்துறை செயலாளர் டெல்லி சென்றுள்ளார். அவர் வந்த பின்னர் அதை பற்றி கருத்து தெரிவிக்கிறேன்.

    தமிழகத்தில் தவறுகள் நடந்தால் நாங்கள் கேட்க அதிகாரம் உள்ளது என தமிழக கவர்னர் ரவி கூறி உள்ளார். பாவம் கவர்னர் அவர் எதையாவது சொல்லுவார்.

    தமிழகத்தில் கனிம வளங்கள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது குறித்து பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அது உப்பு சப்பில்லாதது. அவர் ஆதாரப்பூர்வமாக தெரிவித்தால் நாங்கள் நடவடிக்கை எடுக்க தயார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அதிகாரிகள் இரவு பகலாக கண்காணித்து வருவதால் எந்த சேதாரமும ஏற்படாது.
    • வரும் 16ம் தேதி மிகப்பெரிய மழை வரும் என கூறியிருக்கிறார்கள்

    சென்னை:

    தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியில்வ நீரின் இருப்பு குறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் இன்று ஆய்வு செய்தனர். பின்னர் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3645 மில்லியன் கனஅடி. இப்போது 2786 மில்லியன் கன அடி தண்ணீர் இருக்கிறது. நீர்வரத்து அதிகரித்தாலும் பிரச்சினையில்லை. இன்னும் தண்ணீர் வந்தாலும் தாங்கும் சக்தி ஏரிக்கு உண்டு. இன்னும் மழை வரும் என எதிர்பார்க்கிறோம். 16ம் தேதி மிகப்பெரிய மழை வரும் என கூறியிருக்கிறார்கள். எல்லாவற்றையும் கணித்து, நீர் வரத்து, நீர் வெளியேற்றுதல், பருவநிலை, மழை அளவு ஆகியவற்றை அதிகாரிகள் இரவு பகலாக கண்காணித்து வருகிறார்கள். ஆகவே எந்த சேதாரமும ஏற்படாது.

    ஏரியில் இருந்து வெளியேற்றப்பட்டு பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர் அனகாபுத்தூர் வழியாக அடையாற்றில் கலக்கிறது. ஏரியின் கரைகள் கட்டப்பட்டுள்ளதால் கரையோர கிராமங்கள் பாதுகாப்பாக உள்ளன. தண்ணீர் வரத்து அதிகமாகி, கரையோர பகுதிகளுக்கு ஏதாவது பிரச்சனை என்றாலும் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தயாராக உள்ளது. அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின்போது ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.ஆர்த்தி மற்றும் நீர்வளத்துறை உயர் அலுவலர்கள் உடனிருந்தனர், 

    • காவிரி- கோதாவரி இணைப்புத் திட்டபணிகள் தாமதமாக நடைபெற்று வருகின்றன.
    • வெள்ளப் பெருக்கு நேரத்தில் கடலுக்கு வீணாக தண்ணீர் செல்வதை தடுக்க நடவடிக்கை

    முக்கொம்பு:

    திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கதவணையை தமிழக நீர்வளதுறை அமைச்சர் துரைமுருகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

    முக்கொம்பு கொள்ளிடம் குறுக்கே கட்டப்பட்டுள்ள புதிய கதவணை விரைவில் திறக்கப்படும். காவிரி, தாமிரபரணி, பாலாறு உள்ளிட்ட ஆறுகளில் மழைக்காலங்களில் பெருக்கெடுக்கும் நீர் வீணாக கடலில் சென்று கலக்கிறது. இதுகுறித்து நாங்கள் ஏற்கனவே மூத்த பொறியாளர்களுடன் கலந்து ஆலோசித்துள்ளோம். வீணாகும் வெள்ள நீரை சேமிப்பதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் திமுக அரசு மேற்கொள்ளும். 

    மேட்டூர்- சரபங்கா நதிகள் இணைப்புப் பணிகள் மூலம் கடந்த அதிமுக ஆட்சியில் ஒரு துளி நீரை கூட சேமிக்கவில்லை. காவிரி- கோதாவரி இணைப்புத் திட்டப் பணிகள் மற்ற மாநிலங்களிலும் தாமதமாக நடைபெற்று வருகிறது. காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டம் என்பது அதிமுக அரசு உடைய திட்டமல்ல. அது மத்திய அரசின் திட்டம். தமிழகத்தில் அனைத்து ஏரி, குளங்களும் முழுக் கொள்ளளவை எட்டி உள்ளது.

    கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் பொதுப்பணித்துறையில் பணியாற்றிய தற்காலிக ஊழியர்கள் ஒருவரை கூட பணி நிரந்தரம் செய்யவில்லை. ஆனால், வரும் ஐந்து ஆண்டுகளில் அவர்களை படிப்படியாக நிரந்தர பணியாளர்களை பணியில் அமர்ந்த தேவையான நடவடிக்கைகளை திமுக அரசு மேற்கொள்ளும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • ஆந்திர அரசு அணை கட்டக்கூடாது என சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு போட்டிருப்பதாக அமைச்சர் துரைமுருகன் தகவல்
    • நாங்கள் எந்த காலத்திலும் பயங்கரவாதத்துக்கு துணைபோவதில்லை என மத்திய அமைச்சரின் குற்றச்சாட்டுக்கு பதில்

    காட்பாடி:

    ஆந்திர அரசு அணை கட்ட முயற்சிக்கும் விவகாரத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இரட்டை வேடம் போடுவதாக ஓபிஎஸ் குற்றம்சாட்டினார். இதற்கு, பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், 'பாவம்... அவர் கலங்கிப் போய் எதையெதையோ பேசிக் கொண்டிருக்கிறார். அதைப்பற்றியெல்லாம் பேசவேண்டாம். வேறு யாராவது சொன்னால் சொல்லுங்கள்' என்றார். காட்பாடியில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

    மேலும், ஆந்திர அரசு அணை கட்ட அனுமதிக்கக்கூடாது என சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு போட்டிருப்பதாகவும், அணை கட்டுவதற்கு மேற்கொண்டு நடவடிக்கை எடுத்தால் அந்த வழக்கை விரைவுபடுத்துவோம் என்றும் அமைச்சர் கூறினார்.

    மேலும், திமுக அரசு பயங்கரவாதத்துக்கு துணைபோவதாக மத்திய சுற்றுச்சூழல் துறை இணையமைச்சர் அஷ்வினி குமார் செளபே கூறியது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், "யாரோ விவரம் தெரியாத மந்திரி அவர். நாங்கள் எந்த காலத்திலும் பயங்கரவாதத்துக்கு துணைபோவதில்லை, எங்கள் கொள்கையும் அதுவல்ல' என்றார்.

    • அந்தரத்தில் நீர்ப்பாய்ச்சும் அரசாங்கம் நடத்திவிட்டு போனவருக்கு நிர்வாக நடைமுறைகள் எப்படி தெரியும்?
    • வார்த்தைகளை கொட்டுவது சுலபம். அதைத்திரும்ப அள்ளுவது கஷ்டம்.

    சென்னை:

    எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கைக்கு பதில் அளித்து அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக இருந்த போதும், எதிர்க்கட்சித் தலைவராக சட்டசபையில் அமர்ந்திருந்த போதும் நிதானத்தோடுதான் நடந்து கொண்டிருந்தார்.

    அவருடைய கட்சியில் ஏற்பட்ட பிளவின் காரணமாக மெத்தவும் தடுமாறி போயிருக்கிறார், நிதானம் தவறியிருக்கிறார் என்பது அவர் வெளியிட்ட 25.9.2022 நாளிட்ட அறிக்கையின் மூலம் தெரிகிறது.

    தளபதியின் அரசு "கையாலாத அரசு", "விடியா அரசு", "கும்பகர்ணன் தூக்கம் கொண்ட அரசு" என்று வார்த்தைகளை அறிக்கையில் கொட்டி இருக்கிறார்.

    ஆந்திர அரசு ஆந்திர எல்லைக்குட்பட்ட பகுதியில் பாலாற்றின் குறுக்கே ஒரு நீர்த்தேக்கம் கட்டப்போவதாக அம்மாநில முதல்-அமைச்சர் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசியதாக செய்தி வெளியாகி இருக்கிறது.

    அது ஒரு பொதுக்கூட்ட செய்திதான். அந்த செய்தியை வைத்துக் கொண்டு தளபதி அரசு என்ன சாதித்துவிட்டது என்று அவசர குடுக்கையாக எதிர்க்கட்சித் தலைவர் ஒரு அறிக்கை விட்டிருப்பதைப் பார்த்து எனக்கு அழுவதா? சிரிப்பதா? என்று தெரியவில்லை.

    இப்படித்தான் முன்னர் ஒரு முறை இதே கணேசபுரத்தில் அணை கட்டப்போவதாக வந்த செய்தியைப் பார்த்து சில அறிக்கை தலைவர்கள் அறிக்கைகளை வெளியிட்டார்கள்.

    அதைத் தொடர்ந்து தளபதியும் நானும் கணேசபுரம் போய் பார்த்தபோது அப்படி ஒரு அணை கட்டுவதற்கான எந்த அறிகுறியும் அங்கு இல்லை.

    இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை இவ்வரசு தீவிரமாக கண்காணித்துக் கொண்டிருக்கிறது. தேவையான நடவடிக்கைகளை தக்க நேரத்தில் எடுக்கும்.

    இந்த நிர்வாக ரீதியான செயல்பாடுகள் எல்லாம் எடப்பாடியாருக்கு தெரிந்திருக்க நியாயம் இல்லை. அவர் எந்த அணையையும் கட்டவில்லை.

    அந்தரத்தில் நீர்ப்பாய்ச்சும் அரசாங்கம் நடத்திவிட்டு போனவருக்கு நிர்வாக நடைமுறைகள் எப்படி தெரியும்? வார்த்தைகளை கொட்டுவது சுலபம். அதைத்திரும்ப அள்ளுவது கஷ்டம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசினார்.
    • திடீரென மின்சாரம் தடைபட்டதால் அதிகாரிகளும், எம்.எல்.ஏ.க்களும் மின்துறைக்கு போன் போட்டனர்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் காட்பாடி அரசு ஆண்கள் பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடந்தது. இதில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசினார்.

    அப்போது திடீரென மின்சாரம் தடைபட்டது. உடனே அதிகாரிகளும், எம்.எல்.ஏ.க்களும் மின்துறைக்கு போன் போட்டனர். இருந்தும் 10 நிமிடம் வரை மின்சாரம் வரவில்லை. இதனால் விழாவை பாதியில் முடித்துக்கொண்டு அமைச்சர் துரைமுருகன் புறப்பட்டு சென்றார்.

    • நெல்லை மாவட்டத்தில் நடந்து வரும் நதிநீர் இணைப்பு திட்டத்தின் முதல் 2 பகுதிகள் 100 சதவீதம் முடிந்துள்ளது.
    • நெல்லை மாவட்டத்தில் கல்குவாரிகள் மூடி இருப்பதால் பல தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    நெல்லை:

    தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக நெல்லை மாவட்டம் வந்துள்ளார். நேற்று 10 மாவட்ட அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

    இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் நடந்து வரும் தமிழகத்தின் முதல் நதிநீர் இணைப்பு திட்டமான தாமிரபரணி-நம்பியாறு-கருமேனியாறு இணைப்புத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து இன்று ஆய்வு மேற்கொண்டார்.

    அதன் ஒரு பகுதியாக நெல்லை மாவட்டம் திடீயூர் பகுதியில் நடந்து வரும் நதிநீர் இணைப்பு திட்டப் பணிகள் மற்றும் பச்சையாறு அணைக்கட்டு பகுதிகளை ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நீண்ட ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கபட்ட பணி தாமிரபரணி ஆறு-நம்பியாறு-கருமேனியாறு இணைப்பு திட்டம். நான் இதற்கு முன்னர் அமைச்சராக இருந்தபோது ஆரம்பித்ததை நானே திறக்க வேண்டும் என விட்டுவிட்டார்கள்.

    நெல்லை மாவட்டத்தில் நடந்து வரும் நதிநீர் இணைப்பு திட்டத்தின் முதல் 2 பகுதிகள் 100 சதவீதம் முடிந்துள்ளது. 3-ம் பகுதி 99 சதவீதம் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. 4-ம் பகுதி 58 சதவீதம் பணி நிறைவு செய்யப்பட்டுள்ளது.

    வருகிற அக்டோபர் மாதத்திற்குள் நதிநீர் இணைப்பு திட்டம் பெருமளவு நிறைவு செய்யப்பட்டு பயன்பாட்டுக்கு வர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

    தாமிரபரணி நதி நீர் இணைப்பு திட்டம் மொத்தமாக மார்ச் 2023-ல் நிறைவு பெற்று பயன்பாட்டுக்கு வரும்.

    முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக எதுவும் இனி பேச மாட்டோம். முல்லைப் பெரியாறு தொடர்பான பேச்சுவார்த்தை முடிந்து விட்டது. இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருக்கிறோம்.

    நெல்லை மாவட்டத்தில் கல்குவாரிகள் மூடி இருப்பதால் பல தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சிறிய அளவிலான அபராதம் விதித்து கல்குவாரிகளை திறப்பதற்காக மாவட்ட கலெக்டரிடம் அறிவுறுத்தப்பட்டது.

    ஆனால் அவர்கள் அதற்கு முன் நீதிமன்றத்தை நாடினார்கள். கல்குவாரிகளில் தவறு செய்திருந்தாலும் தொழிலாளர்களின் நிலையை எண்ணி அவர்களை மன்னிப்பதற்கு தயாராக உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது நிருபர்கள், அண்ணாமலை தி.மு.க. அமைச்சர்கள் குறித்து பேசி வருவது குறித்து கேட்டனர். அதற்கு அமைச்சர் துரைமுருகன் சிரிப்பை பதிலாக தெரிவித்து சென்றார்.

    • ஆந்திராவிலிருந்து போதை பொருட்கள் தமிழகத்துக்கு கடத்தப்படுகிறது.
    • தமிழக கவர்னர் மசோதாக்களை கிடப்பில் போடுவது நல்லதல்ல.

    வேலூர்:

    வேலூரில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணியை அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    வேலூரில் அடி பம்புடன் சேர்த்து கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் அதே கட்சியை சேர்ந்தவருக்கு காண்ட்ராக்ட் வழங்கப்பட்டுள்ளது. பஜாரில் பீடி, சிகரெட் விற்பனை செய்து கொண்டு இருந்தவருக்கு இந்த பணி வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வளவு பெரிய பணியை செய்யக்கூடிய தகுதி அந்த காண்ட்ராக்டருக்கு இல்லை. அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    ரூ.20 ஆயிரம் கோடி சுருட்டி விட்டதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அவர் மீதான வழக்கு சுப்ரீம் கோர்ட்டுக்கு வருகிறது. அப்போது பார்க்கலாம்.

    ஆந்திராவிலிருந்து போதை பொருட்கள் தமிழகத்துக்கு கடத்தப்படுகிறது. கும்மிடிப்பூண்டி முதல் கிருஷ்ணகிரி வரை ஆந்திரா பகுதி இருப்பதால் எளிதில் கடத்தி வந்து விடுகின்றனர்.

    கவர்னர், நடிகர் ரஜினி சந்திப்பு சொல்ல முடியாத அரசியல்.

    பாலாற்றில் தற்போது தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பாலாற்றின் குறுக்கே 10 தடுப்பணைகள் கட்டப்பட உள்ளது. பிப்ரவரி மாதம் தடுப்பணை கட்டும் பணிகள் தொடங்கப்படும்.

    மேல்அரசம்பட்டு அணை கட்டிட பணி அடுத்த ஆண்டு தொடங்கப்படும். தமிழக கவர்னர் மசோதாக்களை கிடப்பில் போடுவது நல்லதல்ல. அவர் தன்னை உணர்ந்து நீட் உள்ளிட்ட சட்டமசோதாக்களில் கையெழுத்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×